இலக்கியத்தில் குற்றாலக்குறவஞ்சி என்ற ஒரு நூலில் நம் மூதாதையர் வசந்தவல்லி பந்தாடும் வர்னனைக்கு இன்று மதிப்பு இல்லாமல் போனாலும் !
அந்த பந்தாட்டம் போலத்தான்  இன்றைய நவீன நெட்போல் என்கின்ற வலைப்பந்தாட்டம் .
தமிழன் வீரதீர செயல்கள் எல்லாம் இருட்டடைப்பு செய்யும் இனவாத ஆட்சி தமிழருக்கு அரசியலில் மட்டும்மல்ல விளையாட்டிலும் பாராமுகம் தான் .
அதனைப்பார்த்து வீறுகொண்ட தலைவன் நம் சமூகத்திற்கு உருவாக்கிய வழியில் தமிழீழ விளையாட்டுக்கழகம் மிகவும் பலரை ஊக்கிவித்தது ஒவ்வொரு விளையாட்டிலும்  ஆர்வம் மிக்கவர்களை தேர்ச்சி பெற்றவர்கள் ஆக்குவதில் பின் நின்றதில்லை இந்த சமாதான காலத்தில் அவ்வழியில் வலைப்பந்து விளையாட்டு வீராங்கனைகளில்  சுகியும் ஒருத்தி!
சுகி ஒரு நெட்போல் வீராங்கனை பாடசாலை நெட்போல் அணியில் முக்கியமான வீராங்கனை,
ஆனால் ரகுவிற்கு நெட்போல் என்றால் கண்ணிலும் காட்டாது.போராளிகள் கூட சமாதனம் பேசுவதை விரும்பாத இராணுவத்தளபதி போல ஒரு முறை அப்படித்தான் பாடசாலை மைதானத்தில் அவர்கள் நெட்போல் விளையாடிக்கொண்டு இருக்கும் போது.!
ரகுவின்அவனது நண்பர்களும் விக்கெட்,பேட்டுடன் கிரிக்கெட் விளையாட மைதானத்துக்குள் நுழைய சுகியின் தோழிகள் மைதானத்தைவிட்டு வெளியேரமாட்டோம் என்ற நிலை கிருஷாந்தி தேடலில் நீதி கேட்டு இராணுவ முகாமைமுற்றுகையிட்ட யாழ்  மக்கள்  போல சுகியின் தோழிகள் ஆடாவடி செய்ய பிரச்சனை பெரிதாகியது.

ரகு எதுவும் பேசாமல் மைதானத்தை விட்டு சமாதனம் பேசவந்த தூதுவர்  அவமதிப்பு செய்ததால் வெளியேறிச் சென்றது போல செல்ல,.

உடனே சுகி தனது தோழிகளை விட்டுக்கொடுப்போம் மக்கள் நிம்மதி தான் முக்கியம் போர் அல்ல என்று நேபாளிய  மவோஸ்  போராளிகள் சமாதானம் செய்தது போல ரகுவின் நண்பர்களை நோக்கி நீங்கள் கிரிக்கெட் விளையாடுங்க நாங்க போறோம் என்று சொல்லிவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினாள். போகும் போது ரகுவை நோக்கி ஒரு பார்வையை வீசிச்சென்றாள்.ஜானாதிபதி பதவி விட்டு வெளிச் செல்லும் முன்னால் ஜாதிபதி போல.
இப்படித்தான் ஒரு நாள் சுகியின் வகுப்பு மாணவன் ஒருத்தன் உயர்தரவகுப்பு மாணவிகளை பார்த்து ஏதோ சொல்ல ரகுவின் நண்பர்கள் போய் அவனை காதல் தேசம் அப்பாஸ் குறுப் போல அடிக்க ரகுவும் என்ன ஏது என்று விசாரிக்காமல் அமர்க்களம்  அஜித் போல போய் அவனை அடித்துவிட்டான்.
உப அதிபர் சம்பவம் பற்றி விசாரிக்க வந்தார் வாஞ்சிநாதன் விஜய் காந்த் போல .அவங்கள் தான் சின்னப்பையன்கள் நீங்கள் உயர்தரவகுப்பு தானே அவங்களை அடிக்கலாமா என்று உயர்தரவகுப்பு மேல் முழு பழியும் விழ ரகு உட்பட சிலர் பாடசாலையில் இருந்து இடைநிறுத்தம் என்ற நிலைக்கு பிரச்சனை வர.
உயர்தரவகுப்புக்கு முழு ஆதரவு தந்தார்கள் சுகியும் அவளது வகுப்பு தோழிகளும்.
இல்லை சேர் எங்கள் வகுப்பு பொடியங்கள்தான்(பையன்கள்)உயர்தர வகுப்பு அக்காக்களை பார்த்து நக்கல் அடிச்சாங்க தெருப்பொறிக்கிகள் போல !அதுதான் அண்ணாங்கள் அடித்தவங்க என்று ரகுவிற்கும் அவனது நண்பர்களுக்கு ஆதரவாக கருத்துதெரிவிக்க உப அதிபரும் ரகுவையும் நண்பர்களையும் இடைநிறுத்தம் செய்யும் முடிவை கைவிட்டார்.
முதல் முறையாக ரகு அவளை நோக்கி தாங்ஸ் என்று சொல்லிவிட்டு சென்றான்.
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா அட ஆனந்த பைரவி ராகமா?
வெட்கங்கள் வர வைக்கிறாய் சொல்லத்தான் நினைக்கின்றேன் சொல்லாமல் தவிக்கின்றேன்… என்று சுகியின் மனம் அப்போது பாடியிருக்கலாம் !காதல் சுகமானது போல
சிற்றுண்டிச்சாலையில் ஒரு நாள்  ரகுவும் ,அர்ஜுனும் பேசிக்கொண்டு இருக்கும் போது சுகியும் அவளது தோழிகளும் உள்ளே நுழைந்தனர். சட்ட சபைபோல  அவர்களை கண்டதும் ரகு ஜெயலலிதாவைப் பார்த்த கருணாநிதி எழும்பி செல்ல முட்படுகையில் சுகியின் தோழி சொன்னால் அண்ணா உங்களுடன் கொஞ்சம் கதைக்கனும்  .எப்ப கதைகளாம் எப்ப என்றாலும் கதைகலாம் என்று சொல்லிவிட்டு ரகு சென்றுவிட்டான்.
பாடசாலையில் விளையாட்டுப்போட்டி ஆரம்பமாகியது சுகியும் ரகுவின் இல்லம் தான்.சின்னவயதில் இருந்தே விளையாட்டில் பெரிதும் ஆர்வம் உள்ள ரகு கடந்த சில வருடங்களாக எந்த விளையாட்டு போட்டிகளிலும் பங்குபற்றுவது இல்லை.தோற்கடிக்கப்பட்ட முன்னால் தொகுதி MP போல இந்த முறை உயர்தர வகுப்பில் படிப்பதால் ஆசிரியரின் வற்புறுத்தலுக்கு அமைய ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டான் 5000 மீற்றர் ஓட்டத்தில்,1ம் இடமும்,800 மீற்றர் ஓட்டத்தில்-3ம் இடமும்,1200 மீற்றரில் இரண்டாம் இடமும் ரகுவிற்கு கிடைத்தது.ரகுவைவிட ஆசிரியரைவிட அதிகம் மகிழ்ந்தது சுகிதான்.
இல்லங்களுக்கு இடையிலான நெட்போல் போட்டியில் ரகுவின் இல்லம் வெற்றி பெற்றது. சுகி பரிசுவாங்கும் போது எல்லோறும் கைதட்டும் போது ரகுவும் கைதட்டிய போது அங்கே பரிசுவாங்கியதைவிட அவனது கைதட்டல்களால் பெரிதும் மகிழ்ந்தாள் அவனிடம் அன்பை எதிர்பார்க்கும் அந்த அபலை
கிரிக்கெட் போட்டியில் ரகுவின் இல்லம் தோல்வி அடைந்தது அந்தப்போட்டியில் ரகு பெரிதாக சோஷபிக்கவில்லை அவன் பெற்றது வெரும் 3 ஓட்டங்கள் தான். ஆனாலும் விக்கெட் கீபராக இருந்த ரகு ஒரு அபாரமான கேட்சை பாய்ந்து பிடித்த போது அவளையும் அறியாமல் சந்தோசத்தில் அந்த மங்கை துள்ளிக்குதித்தாள்.விண்வெளி சென்ற கல்பானசாவ்லா போல!
 எல்லோரும் அவளது இல்லம் என்பதால் அவள் சந்தோசப்பட்டாள் என்று நினைத்தனர்.ஆனால் அவளுக்கும் அவளது தோழிகளுக்கும் ரகுவுக்கு மாத்திரமே தெரியும் அவள் மகிழ்ச்சியில் துள்ளியதுக்கு காரணம் ரகுமேல் இருந்த காதலால் தான் என்று.
போட்டி முடிந்ததும் ரகு தனது அணி தோல்வி அடைந்த கவலையில் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தான். சுகியும் அவளது தோழிகளும் அவனை நோக்கிவருவதை அவன் கவனித்தாலும் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.
என்ன ரகு அண்ணா தோத்துவிட்டோம் என்று கவலையா? விடுங்க தோற்பதும் ஜெயிப்பதும் இயல்பு கலந்து கொண்டது தான் முக்கியம் .கிரிக்கெட்டில் தோத்தால் என்ன ஒரு மாகாணம் போனா என்ன மற்ற இடங்களில் ஆள்வது போல மற்ற விளையாட்டுக்களில் வென்றுவிடலாம் எப்படியும் எங்கள் இல்லம் தான் ஜெயிக்கும் நம் கட்சி ஆட்சி தான் பாருங்க இம்முறை.
அவர்களின் குரல் கேட்டு ரகு அவர்களை நோக்கினான்.சுகி வரவில்லை அவளும் இன்னும் ஒரு தோழியும் சிறிது தூரத்தில் நின்று கொண்டு இருந்தனர்.ஏனைய இருவர் மாத்திரமே ரகுவிடம் வந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
ரகு அண்ணா ஒன்று உங்ககிட்ட சொல்லனும் தப்பா நினைக்ககூடாது!
பரவாயில்லை சொல்லுங்க என்று ரகு அவர்களை பார்த்தான்.
இல்லை சுகிக்கு உங்களை ரொம்ப புடிக்குமாம் உங்களுக்கு சுகியை பிடிக்குமானு கேக்கச்சொன்னாள் ?என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் அந்த இடத்தைவிட்டு ஓடி மறைந்தனர்.
சிறிது தூரத்தில் நின்ற சுகியும் மற்ற தோழியும் அவர்கள் பின்னால் ஓடிச்சென்றனர்.
ரகுவின் மனம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது .இவ்வளவு நாளும் பார்த்துக்கொண்டு இருந்தவள் இன்று கேட்டுவிட்டாள். இந்தக் காதல் சரிவருமா இல்லையா?
ஒருவேளை நான் ஓம் என்று சொன்னால் என்ன பிரச்சனைகள் வரும்? என்னை என்ன வேணும் என்றாலும் அவர்கள் குடும்பத்தால் செய்யமுடியும்.
 அதை எதிர்க்கும் அளவுக்கு என் குடும்பப்பின்ணணி ஒன்று பெரியது இல்லை .சாதாரன நடுத்தர வர்கத்தை சேர்ந்தவன் எனவே இது எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.இதை வளரவிடக்கூடாது அவளிடம் தெளிவாக சொல்லிவிடவேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தான்.
அடுத்தநாள் பாடசாலையில் சுகி நேருக்கு நேர் அவனை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவளாக பார்வையை வேறுபக்க திருப்பி சென்றாள்.சிறிது தூரம் சென்றதும் திரும்பி அவனை பார்த்து ஒரு சிரிப்பை உதிர்ந்துவிட்டு சென்றாள்.
இவளிடம் எப்படியும் எடுத்து சொல்லி இன்றுடன் இந்தப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் எவ்வாறு அவளை சந்தித்து பேசுவது ?என்று அவன் யோசித்தவாறு வகுப்பறைக்கு சென்றுவிட்டான்.ஆனால் அவளாகவே மதிய இடைவேளையின் போது ரகுவை தேடி வந்தாள்!

(தொடரும்)//////

இல்லம்- பாடசாலையில் உள்ள மொத்தமாணவர்களையும் மூன்றாக பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொறு பெயர் வைத்து உதாரணம் பச்சை,மஞ்சல்,சிவப்பு அதில் மாணவர்களுக்கிடையில் வருடம் வருடம் விளையாட்டுப்போட்டி நடக்கும் இதைத்தான் இல்லவிளையாட்டுப்போட்டி என்று சொல்லுவார்கள்.வருடத்துக்கு ஒரு முறை ஒவ்வொறு இல்லத்திலும் மாணவர்களை மாற்றுவார்கள்.

 

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book