பிரேமதாச ஆட்சியில் பள்ளி மாணவர்கள் ,மாணவிகளுக்கு வந்த மதிய உணவுத்திட்டம் அடுத்து வந்த சில ஆட்சியில் தொடர்தாலும் பின்  பன்னாட்டு நாணயநிதியம்    வறியநாடுகளுக்கு வழங்கும் சலுகைகள் .இலங்கை ஆட்சிக்கும் துண்டுவிழத் தொடங்கியதும் !
அதன் மேற்பார்வையில்  இயங்கும் இனவாத ஆட்சியில் தாயக மண்ணில் தமிழர் காணமல் போனவர்கள் போல போய்ச் சேர்ந்த பின் எஞ்சிய வயோதிபர்கள் போல கையில் பணம் இருந்தால் மட்டும் பள்ளியில் இருக்கும்.சிறுண்டிச் சாலைப்பக்கம் போகமுடியும் !
ரகு உழவன் மகன் என்றாலும் உள்ளத்தில் பணக்காரன் .அதனால் நானும் ஓர் தொழிலாளி போல தந்தைக்கு உதவுபவன் என்பதால் தந்தை கொடுக்கும் அன்புப் பரிசுப் பணம் செலவு செய்வது இந்த சிற்றுண்டிச் சாலையில்  .
மதிய உணவு இடைவேளையின் போது ரகு சிற்றுண்டிசாலைக்குள் நுழைந்தான்.சுகியும் அவளது தோழிகளும் இவனுக்கு பின்னாலே உள்ளே நுழைந்தனர்  பனைப்பொந்தில் கிளி பிடிப்பது போல!
அவளது தோழியான சுவாதி பேச்சை ஆரம்பித்தாள்.
 என்ன ரகு அண்ணா ?நேத்து கேட்டதுக்கு ஒன்னும் பதில் சொல்லவில்லையே.
இதுதான் சமயம் என்று ரகு தன் மனசில் வைத்திருந்த எல்லாவற்றையும் கொதி எண்ணெய்யில் பொறிக்கும் கோழிக்காலைப் போல கொட்டி தீர்த்தான் .
“இங்க பாருங்க தங்கச்சி .சுகிதான் லூசுத்தனமா யோசிக்குது என்றால். நீங்களும் அதை வந்து என்கிட்ட கேட்குறீங்க “
என் நிலை என்ன என்று எனக்கு நன்றாக தெரியும்.!
“நாங்கள் வாழும் தேசத்தின் நிலை என்ன இந்தா அந்தா தீர்வுத் திட்டம்  என்று ஒருபக்கம் ஆட்சியாளர் நடிக்கின்றார்கள்,
  வா போருக்கு என்று இனவாத இராணுவம் யுத்த மீறல் செய்யுது இன்னொரு புறம் .
சாமாதானம் நிலைக்க யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின்  கண்காணிப்பாளர்கள் மத்தியஸ்தம் செய்ய வருவார்கள், எல்லாம் பார்ப்பார்கள் என்று  பத்திரிகை எழுதுகின்ற நிலையில் !
எங்கள் சந்தி சிரிக்குது விஜய் ,அஜித் என்று  அலங்கரித்த பத்திரிக்கையின் முகப்பில் இப்ப ஹீரோக்கள் எரிக்சொல்ஹைம்,யாக்காசி அக்காசூயி,ஜோன்ஸ் பார்க்கர்ஸ் என்று வாயில் நூழையாத பேர் எல்லாம் அடுத்த பரீட்சையில் ஏட்டுச்சுரக்காய் போல வருமோ பொதுக்கேள்வியில் என்று படிக்கும் என் நிலை எந்த வெளிநாட்டு மாணவன் அறிவான் ?
அதே போல சுகியின் நிலை என்ன என்று அவங்களை தெரிந்துகொள்ள சொல்லுங்க .
காதல் சுகமானது என்று பாட்டு பாடிவிட்டு பின் இந்த ஊர் விட்டுப்  போய் உனக்கு என நான் இருப்பேன் என்று பாடும் நிலையும் வேண்டாம் ,எங்க காதலால்  செந்தூரப்பாண்டி போல அண்ணன் வெட்டிப்போட்டு சிறைக்குப் போகும் நிலையும் வேண்டாம் ,என்னை சீர்குலைக்கும் நிலையும் வேண்டாம் .
காதல் மரத்தை  வெட்டி விட்டுப் போகும் தனிமரம் நான்!
இது எல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
அப்போது சுகியின் கண்கள் கலங்கியதை அவன் கவனிக்காமல் இல்லை.!
நல்ல தோழிகள் நல்லதைச் சொல்லி காதல் போதையில் இருக்கும் நல்ல நண்பியை தெளிவு படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் .சேற்றில் தள்ளக்கூடாது .
“சந்தனத்துக்கும் சாணிக்கும் வாசம் வேற நல்ல தெளிவு காட்ட வேண்டியது நல்ல தோழிகள்!
சுவாதி நீ எந்த வழி சொல்லப்போறாய்??????
நிச்சயம் இந்தக் காதல் சரிவராது என்றுஅவனுக்கு நன்றாகவே தெரியும்.எனவே வெளியே வரமுடியாது என்று தெரிந்தும் பள்ளத்தில் குதிக்க ரகு தயாராக இல்லை.!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book