எழுதும் கவிதை எழுதியவர் பார்வைக்கும் வாசிக்கும் வாசனுக்கும் இடையில் சிந்தனைப்பாலம் போடும் !சிறப்பு உருவக அணி ,உள்ளீடு, பாடுபொருள் இயல்புகளைப் பார்த்து அப்படித்தான் சொன்னது போல அடுத்த நாள் அவள் தோழி சுவாதியிடம் அவளது கவிதைக்கொப்பியை ரகுவிடம் கொண்டுவந்து தந்தாள்.!
மிகவும் அழகான அதிகாலை மலர்ந்த ரோசாப்பூ,ஆனந்தம் படத்தில் சினேஹா கொடுக்கும் விளக்கேற்ற வரலாமா ?என்ற இதயம் காட்சிப் படம் போல படங்களைவெட்டி ஓட்டி அதில் தபூசங்கர் கவிதைகள் போல காதல் ஈர்ப்பில் அவர் சாயலை உள்வாங்கி சில கவிதைகளை எழுதியிருந்தாள். சுகி !
சிலதை பொதுவில் பகிரமுடியும் சிலது தணிக்கை செய்ய வேண்டும் தனிப்பட்ட புனித அந்தரங்கம் என்பதைப்போல பல கவிதைகள் நெஞ்சில் பதிந்தது அவள் போட்ட கோலங்கள்.ஆனாலும் ….. !
மனித வாழ்க்கையில் காதல் என்ற ஒன்று தவிர்க்க முடியாத தருனம்.  அது யார்மேல எப்போது ?வரும் எப்படி வரும்? என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனா பரீட்சை மறுமொழி வருவது போல வரவேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டாவரும். அதே போலதான் சுகியின் காதலும் ரகுவின்மேல்.
ஏன் அவளுக்கு விவசாயிமகன் மீது காதல் வந்தது என்று அவளிடம் கேட்டால் ?நிச்சயம் அவளுக்கு புரியாத புதிர் போல பதில் சொல்லத்தெரியாது.
இந்த உலகில் அவள் வாழுகின்றவரை அவன் நினைப்புகள் அவள் மனதில் ஏதோ ஒரு மூலையில் மூச்சுக்காற்றுப்போல என்றும் இருக்கும்.
அதே போல ரகுவின் மனதிலும் ஏதோ ஒரு மூலையில்இரத்த நாளங்கள் போல அவள் நிச்சயம் இருப்பாள்.
கண்காணிப்புக்குழுவும், சர்வதேசமும் சாமாதான நாடகத்தை கைவிட்டு கண்ணுறங்கத் தொடங்கிய 2007 ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தின் ஒரு நாள் !
ரகு பாடசாலைக்கு வந்திருந்தான். அவன் மனம் எல்லாம் கவலை. காரணம் இதுதான் அவனது பாடசாலை வாழ்க்கைக்கு இறுதிநாள் !
 ஆம் பள்ளி என்ற நந்தவனத்தில் தென்றலாக வலம் வந்த விவசாயி வாரிசின் கனவு இனவாத விசத்தின் வெறியினால் விடுதலைப்பக்கம் புயலால வீசும் நிலை.
அடுத்த நாள் இயக்கத்தில் இணைவதாக முடிவெடுத்து இருந்தான்.
அன்று பாடசாலையில் சுகியை பார்த்து சகஜமாக கதைத்தான் .ஆனால் அவளுக்கு அவனது முடிவு பற்றி தெரியாது முன் உணர்ந்து கொள்ள அவள் என்ன அரசியல் வாதியின் மகளா ?பிடிவிராந்து வரும் என்று தெரிகின்ற போது நீதிமன்றத்தில் ரத்துபிடிவிராந்து வாங்கி வைக்க.
அவனும் சொல்லவில்லை.சொல்லிச் செல்ல இது என்ன ஜனாதிபதி வெளிநாட்டு சுற்றுலாவா பயணமா???
என்மேல எதுவும் கோபம் இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்க சுகி .நான் உங்களை நிறைய வேதனைப்டுத்திட்டேன்.எத்தனை தரம் எண்ணிடம் காதல் யாசகம் கேட்டீர்கள்?
 கையில் பணம் இருந்தும் தர்மம் செய்யாத பணக்காரன் போல நான்.
எதைப் பற்றியும் யோசிக்காது நல்லாப் படியுங்க இனவாத யுத்த மோகம் ,மதவாதம்,மொழிவாதம் ,பிரதேசவாதம் ,பிடிவாதம் என பலரின் வாழ்வை பள்ளிக்காலம் சீரழிக்கின்றது.
அது எல்லாருக்கும் புரிவது இல்லை என்று முன்னர் என் நண்பன் சொல்லியது ஞாபகம் வருகின்றது  சுகி
நீங்க என்னைவிட சிறப்பான ஒருவரை எதிர்காலத்தில் பார்க்கும் போது எங்களுடன் ரகு படித்தானா என்று நினைப்பு வராது.!
பள்ளி வயதில் என் மேல் உங்களுக்கு வந்த ஈர்ப்பை காதல் என்று சொல்லமுடியாது .ஒரு காலத்தில் இதை யோசிக்கும் போது எங்களுடன் படித்தவனும் பளாக் எழுதுகின்றான் ,எழுத்துப்பிழைகளில் கொல்கின்றான் எங்க ஊர் ஆசிரியர் தகுதியை ஹிட்சு வெறியில் சோமபாணத்தில் எழுதுகின்றானோ ?,என்பதைப்போல உங்களுக்கே சிரிப்பு வரும் பாருங்க. அப்போது நான் காற்றில் சுழலும் புறாவின் இறகு போல உங்களைவிட்டு வெகுதூரம் போயிருப்பேன். !
ஏன் ரகு ?திடீர் என்று இப்படி எல்லாம் கதைக்கிறீங்க நான் தான் உங்களை நிறைய கஸ்டப்படுத்திட்டன். என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள்.ஆனால் உங்கள் மேல வந்த விருப்பம் உண்மை ரகு .ஆஸ்திகனுக்கு இருக்கும் கடவுள் பக்தி போல அது எப்பவும் மாறாது. என்றோ ஒரு நாள் என்னை நீங்க புரிந்துகொள்ளுவீங்க என்ற நம்பிக்கை இருக்கு கோகுலம் படத்தில் வரும் பாணுப்பிரியாபோல என்று சுகி தன் பங்கிற்கு அவள் மன ஆதங்கத்தை கொட்டி முடித்தாள் .
ரகு மனதுக்குள் பூம்பாறையில் பொட்டுவைத்த பூங்குருவி பாடல் போல என்று சுகியை நினைத்து சிரித்துக்கொண்டான் .அன்று பாடசாலைவிட்டதும் சைக்கில் பார்க்கில் சைக்கிளை எடுத்துக்கொண்டு ரகு பாடசாலையை விட்டு வெளியேர தயார் ஆனான்.
 தூரத்தில் சுகி உன்னை நினைத்துப்படத்தில் சினேஹா ரயில் நிலையத்தில் காத்திருப்பது போல அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள். ரகுவும் அவளை திரும்பி பார்த்தான்  விழியில் வலி தந்தவளே !!விடைபெறுகின்றேன் விதியின் வழியில் பிரிகின்றேன் .நெஞ்சிருக்கும் வரை நீதானடி என் ஜீவன் என்பதைப்போல !!
சிலவேளை இதுதான் அவளை பார்க்கும் இறுதி பார்வையாகவும் இருக்காலாம் ஆனால் அந்த மங்கை அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது இந்தப்பாடல் காற்றில் வந்தது!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book