நம்மோடு படித்தவர்கள் கூட இருந்து பள்ளியில் பழகியவர்கள் பலர் ஒவ்வொரு போர்ப்பாசறையில் ஏதோ ஒரு பொறுப்பாளரின் பின்னே போர் முரசு கொட்டி களத்தில் இருந்தார்கள் !

அப்படி இருக்கும் நிலையில் சிலரின் வீரச்சாவு எங்கள் நண்பர்களுடன் பகிருப்படுவதும் உண்டு சிலரின் இழப்பை விழிக்கு கொண்டுவருவது விடியலில் வரும் நாளிதழ் அப்படித்தான் ரகுவுடன் படித்த அவன் நண்பன் சுயன் மண்ணுக்காக இறந்தவர்கள் பட்டியலில் இணைந்துவிட்டான் என்ற செய்தி ரகுவிற்கு ஒரு வாரம் கழித்துதான் தெரியும். அனால் அவன் அழவில்லை அவன் கண்கள் ஒருதுளி நீரையும் சிந்தவில்லை.

சுயனுக்கும் அவனுக்குமான நட்பு இணைந்த கைகள் போல எழுத்தில் வர்ணிக்கமுடியாதது. அவனது பாடசாலை வாழ்கையில் மறக்கமுடியாத ஒரு நண்பன் சின்னவயதில் இருந்தே பழக்கம்.சுயன் சற்று சண்டியர் விருமாண்டி போலஆனால் அவன் மனமோ குழந்தை போல அது அவனுடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும்.!
அவன் ஒருத்தியை நேசித்ததும் அவள் அவனை செந்தமிழில் பூசித்ததும் புழுவாரித் தூற்றியதும் எல்லாம் நீங்காத நினைவுகள்!
அவனுடன் பள்ளியில் சண்டை போட்டது பாவையரின் பின்னே ஜொல்லுவிட்டது என நினைவுகள் பசுமையானவை.
இவனுக்காக அவனும் அவனுக்காக இவனும் போட்ட சண்டைகள் ஏராளம் இந்த ஜென்மம் மட்டும் இல்லை இன்னும் ஒரு ஜென்மத்திலும் நான் உந்தன் நண்பனாக வேண்டும் நண்பனே உன் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்று ரகு மனதிற்குள் பிராத்தனை செய்துகொண்டான்.

நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். சிலநேரங்களில் சில மனிதர்கள் போலஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.பிதாமகன் சூர்யா போல!

இன்று சுயன் நாளை நானாக கூட இருக்கலாம் ஆனாலும்  தன் நண்பனின் இறப்பு என்றாலும் சரி தன் இறப்பு என்றாலும் சரி அது அர்த்தப்படுகின்றது என்று நினைத்துக்கொண்டான்.தாய் மண்மீது நேசிப்பில் என்பதால்!
போராடினால் தான் வாழ்க்கை கடவுளுக்கு வன்னி மாந்தர்கள்  மீது ஏன் இத்தனை ஓரவஞ்சனை. !
சுயனின் நினைவில் மூழ்கியிருந்த ரகுவின் மனதில் சுகி எட்டிப்பார்த்தாள் பாறையின் இடுகில் வேர் விடும் கொடிபோல  !

அவளது அழகிய முகம் அவன் முன்னே வந்து போனது.பாவம் என்னை எவ்வளவு நேசித்தாள் ஆனால் என்னால் தான் அவள் காதலை ஏற்கமுடியவில்லை.

அவள் மனம் எப்படி இலங்கை வேந்தன் கலங்கி நின்ற காட்சி போல நொந்து இருக்கும்.அந்த சின்னப் பெண்ணின் மனதில் என் மீதான வாலிப ஈர்ப்புக் காதல் அவள் இறுதிக்காலம் வரை இருக்குமா? இல்லை என்னை மறந்திருப்பாளா?அப்படி மறக்கவில்லை எனில் இறைவா என் மீதான நினைப்பை மறக்க செய்.அவள் அப்படித்தான் படம் போல!

என்னில் அன்பு காட்டிய அந்த ஜீவனுக்கு மேலும் கஸ்டம் கொடுக்காதே அவள் சந்தோசமாக இருக்கவேண்டும் .அவள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கவேண்டும்!

.நேசித்தவள் நிறைவாக வாழ வேண்டும் என்பது தானே தூய்மையான யாசகன் நேசிப்பவன் வேண்டும் வரம்!

ஏதோ ஒரு காலத்தில் எம் மண் விடிகின்ற போது அப்போது நான் உயிருடன் இருந்தால்!!!

அவளை சந்திக்கும் போது என் மீதான நினைப்பு அவளுக்கு இருக்க கூடாது.என்னை ஒரு தலையாக காதலித்தது தவிர அவள் எந்த தவறும் செய்யவில்லை .எனவே அவள் வாழ்க்கையை வளமாக்கு என்று இறைவனிடம் ரகு சுகிக்காக வேண்டிக்கொண்டான்!

என்னவளே என்னுள் வந்தாய் தீயாக
எனக்கும் உன் நேசம் பிடிக்கும் நதியாக
என் தேசம் எரிகின்றது விடுதலை வேள்வியாக
எப்போதும் நீ இருப்பாய் யாகமாக
என்றாவது வந்தால் நீயாக
என்னிடம் வந்திடாதே கொடியாக
என் வழியில்  உன் குடும்பம் நந்தியாக
எனக்கும் வழி மறிக்கும்! என்னை மறந்து விடு!!!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book