இந்த உலகில் சாமாதானம், சாந்தி ,சுபீட்சம் ,பேசும் உலக வல்லரசுகளும், அயல் தேசங்களும், இணைத்தலமை நாடுகளும், அருகே இருந்து அன்பே போதித்த கொல்லாமையை வலியுறுத்திய புத்தனை வணங்கும் புத்திகெட்ட மக்களும் !

இன்னொரு இனத்தை புழுப்போல சங்காரம் செய்த இனமாகிப்போன வரலாறு ஈழத்துகொட்டில்களில் இன்னும் இதய வீணையாக முகாரி வாசிக்கின்றது மூச்சிழந்து .

எப்படி எல்லாம் இறுதி நேரத்தில் இரந்து நின்றோம் ஏதிலியாக அழது புலம்பவும் கண்ணீல் நீர் இன்றி ,கல்லாகிப்போன அந்த கணத்தை எப்படி எழுத்தில் ஓவியம் போல ஒன்ற வைப்பது !

ஒப்பாரும் மிக்காரும் வாழ்ந்த தாய் பூமியில்  யுத்த தாண்டவம் ஆடிய அந்த சம்பவத்தை மறந்து விட்டுப்போக எப்படி இந்த உலக வாழ்வில் முடியும்!

அப்படி மறந்து போக இது என்ன ஐபில் விளையாட்டா ?இல்லை அழுது புலம்பும் சீரியல் போலவா ?பிரபல்யம் ஆகிவிட்டோம் என்பதுக்காக சிறு பிள்ளையாக இன்று பேசுவோர் எல்லாருக்கும் எங்கள் சிறுபிள்ளைகள் எல்லாம் கையேந்திய போது கண்டுகொண்டார்களா? கண்டியில் இருந்தும் ,கான்பரோவில் இருந்தும் !

எதைப்பற்றி ஆர் சொல்வது ஊடகத்துக்கு!

ஒருவேளை போராட்டம் நாம் எதிர்பார்த்த போலமுன்னம் பல்லாயிரம் வீரவேங்கைகளின் புனித உயிர் ஈழம் என்ற கோட்டைக்காக இந்த ஈழப்பூமித்தாய் மீது புதைத்த அவர்களின் இன்னுயிர்களும் ,இழந்த அவலங்களும் ,இன்னும் பல கொடைகளும், சேர்ந்து ஒப்பில்லாத தலைவன் வழி வந்த வழிநடத்தலில் வெற்றி பெற்று இருந்தால் !

ரகு போன்றவர்கள் சிந்திய வேர்வையும்,குருதியும் பிரயோசனப்பட்டு இருக்கும் !
ஆனால் எத்தனை ஆயிரம் உயிர்களை காவுகொண்ட யுத்தம்  உடமைகள் ,அங்க இழப்பு ,அவலச்சூழலில் ,மனப்பிரள்வு ,ஆகி பித்துப்பிடித்தது பல ஆயிரம்!

இறுதியில் அந்த உயிர்கள் சிந்திய குருதிக்கு கட்டுப்படுத்தும் சூழல் இருந்தும் ஆட்சியதிகாரம் சுவைத்துத்துக்கொண்டு ,மானாட மயில் ஆடா அது பார்த்து கடிதம் தீட்டிய காந்தியின் உன்ணாவிரதத்தையும் தன்  உணர்ச்சிப்பேச்சில் திராவிடம் வளர்த்த நடிப்பால் சின்னத்தனம் போல உன்ணாவிரதம் என்ற போர்வையில் தொலைக்காட்சியில் தன் விளம்பரம் தேடியவர்களும்!

வெயில் என்று கொடைக்காணலில் வேலிபோட்டு குளிர் காய்ந்தவர்களும் .வேண்டாம் இனி பிறந்தநாள் விழா என்ற நடிப்புத்தலைவரும், நடைப்பயணத்திலேயே செந்தநாட்டுப்பிரச்சனை பேசாமல் அயல் தேசம் பற்றி அக்கோரம் பேசும் கூட்டங்களும் ,அம்பேத்தகர் வழி என்று தலித்தியம் பேசி அதில் உண்ணாவிரதம் இருந்து உச்சநடிப்பில் உச்சா போனவர்களும் ,
இவர்களையே உத்தமர்கள் என்று உலகவீதியில் நம்பிக்கொண்டு வந்தேறு தேசம் என்றாலும் அடுத்த சந்தயிடமும் இன்னும் இனப்பற்று உண்டு என்று அவர்கள் தலையில் அடுத்த கட்டத்தினை ஏற்றிய  பின் தம் கடமை முடிந்தது என்ற  நம் புலம்பெயர் உறவுகள் ஒருபுறம் என்றால் !

அங்கேயும் நானே அவரின் பிரதிநிதி என்று  குத்துவெட்டில் நன்றி கெட்ட நம்பிக்கை மோசடியில்   கடைசிநேர கையூட்டலில் காலை வாரிவிட்ட நிலையில் .

நம் விடுதலை பயங்கரவாதத்தினை பலியெடுக்கின்றேன் என்ற போர்வையில் பலர் பார்த்துக்கொண்டு இருக்கவே படை எடுத்து வந்து செய்த அட்டுழியங்கள் எல்லாம் நம் ஈழக்கனவை !மெளனித்திப் போய்விட்டது.!!

இறுதிநேர விடுதலைவேள்வியை பொது வீதியில் ஊற்றிய தாரினைப்போல நம் இனத்தின் மீது கந்தகப்புகையும் ,காடைத்தனத்தையும் ,கட்டவிழ்த்துவிட்டு முள்ளி வாய்க்கால் வழியாக மூடிவிட்ட செயல் கண்டு இரந்து நின்ற காட்சிதனை கையகப்படுத்தி எந்த ஊடகம் இன்னும் வெளியிடும் எல்லாம் பார்த்து வந்த விழியில் இருந்து வடித்தது கண்ணீர் அல்ல இரத்த ஆறு!!

இன்றும் வடிக்கும் இயல்புநிலைக்கு வரமுடியாத நம் உறவுகள் நினைத்து.இருடறையில் இருக்கும் இன்னும் விடியாத நம் உறவகள் நினைத்து ,யார் வழி தவறியது என்று தெரியாமல் கையேந்தி நின்ற நம் நிலை பற்றி ஏன்ண்டா தப்பி வந்தீர்கள் என்று கேட்டவர்களும் நம் இனம்தான் ???,எப்படியோ எதிர் பார்தவைகள் எல்லாம் எங்கள் முன்னே வீழ்ந்து போனது .எங்கள் உறவுகள் எரிந்து போனவர்களை  ,புதைக்கவில்லை எந்த உயிர் இன்னும் துடிக்குது ,சுவாசம் இருக்கா ?போர்த்து மூட உடையின்றி உருகுழைந்த உடல்கள் பற்றி எந்த பிரம்மையும் தெரியாமல் பிறந்த மேனியோடு இருந்த அவலம் எல்லாம் கடந்து வந்த பின் வெட்கம் என்ன இருக்கு ??

அந்த நேரத்தில் கைகொடுக்க வேண்டியவர்கள் எல்லாம் அயல் தேசத்திலும் ,அமெரிக்காவிலும் ,அலுவல்கள் பார்த்தார்களாம் !!

அகதியாக வந்தவர்கள் எல்லாம் ஆற்றுப்படுத்த வேண்டியவர்கள் என்ற வெட்டிப்பேச்சும் ,அப்பாவிகள் பாவம் சுமந்தவர்கள் என்று அங்கதச்சுவையோடு தொலைக்காட்சிகளில் வீராப்பு எல்லாத்தையும் ஒலி/ஒளிபரப்பியது இனவாத ஊடகம்.

எல்லாம் ஒய்ந்த பின் .ஓடிவந்தார் பாங்கி மூன் கூடவே நாசம் கட்டிய விஜய் நம்பியார் மெனிக்பாம்.

இது எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவன் ரகு! பாதத்தில் குண்டு அடிபட்டதில் அப்பாவியாக!

அதன் பின் இன்று அந்த மக்கள் விரும்புவது அமைதியான வாழ்கையையும் யுத்தம் இல்லாத உலகத்தையும்  இனி ஒருமுறை அங்கே குண்டு மழை பொழிவதையும்,குருதி, ஆறு ஓடுவதையும் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். எனவே ஈழம் ;ஈழம் என்று இன்னும் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் புண்ணியவான்களே கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள் அந்த மக்களின் உணர்வுகளை.!!!!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book