யுத்தம் காடாக்கிய வன்னி மண்ணில் மீண்டும் சோலையாக்க வேண்டிய் பாரிய வேலைப்பாடுகள் பல்தேசியத்தின் உதவியுடன் மீளக்கட்டியெழுப்ப வேண்டும் !

பாழான இனவாத அரசியல் ஆலோசக வாதிகள் அகற்றப்பட்டு இந்த நாடு செழிப்புற்றால் மட்டுமே அது சாத்தியம் !

இனவாத பேய்கள் ,மதவாதசகுனிகள் ,மொழிவாத குருடர்கள் ,அயல்தேச முள்ளமாரி ,முடிச்சவிக்கி , வேடதாரி பேய் ஓட்டிகள் எல்லாம் போய்த்தொலைந்தால் தான் புண்ணிய் பூமி ஆகும் அது!
சீர் செய்ய நீண்டகாலம் என்பது நினைவிற்குத் தெரியும்.

வடக்கில் இருந்து தெற்கு கொண்டு போன பிள்ளைகள் எல்லாம் புனர்வாழ்வு என்ற பூட்டிய சிறையில் புழுவைப்போல புதைத்து விடுவார்களா ?விடுதலையாகி  வெளிவரும் பிள்ளை முகம் காணூவேனா ?என்ற  சோகத்தை நெஞ்சில் தாங்கி நிற்கும் எங்கள் உறவுகள் எல்லாம்  நிற்க முதலில் ஒரு ஊன்றுகோல் தாங்க!

எங்களுக்காக பள்ளியை பகிஸ்கரிப்போர்களே பள்ளிக்கே போக  வழியில்லாமல் பலர் இங்கு வாழும் .அவலத்தை பலதேசத்துக்கு சுதந்திரமாக சொல்லுங்கள் .

வந்து படிப்பிக்க முயலுங்கள் பாழான அரசியல்  தாண்டி .உங்கள் படிக்கும் காலத்தில் உயிர் விட்டு தீக்குளித்து தியாகி ஆகி எங்கள் தியாயங்களை கொச்சைப்படுத்ததீர்கள்.

எங்களுக்கு இந்த ஜென்மத்தில் இப்படி நடக்க வேண்டும் என்று எழுதிய கடவுளைக்கூட சபிக்கின்றோம் நாள் தோறும். கண்ணகி தேசத்துக்கு சாபம் போட்டு எழுதிய தாமரையின் கவிதை போல.

முசேலினி வம்சத்து முந்தாணையில் ஒளிந்து கொண்டு முத்துப்பல் இழித்துக்கொண்டு முகாரி பாடாதீர்கள்  மத்திய அரசை மீறி ஒன்றும் நடக்காது கவலை வேண்டாம் என்று அறிக்கைவிட்டுக்கொண்டு .

ஆட்கள் படை சூழவந்து ,பட்டாடைகட்டி பால்ச்சோறு தின்று விட்டு .தேனொழுகப்பேசி விட்டு ,தென்னகம் சென்று நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள். ஈழம் வெல்வோம் என்று இது எல்லாம் உங்கள் ஊர் சினிமா நட்சத்திரம்
களிடம்  காட்டுங்கள் .

எங்கள்  கால் வலிக்குது எத்தனையோ உள்குத்தினால் என்று நினைத்து  மீண்டும் கிளிநொச்சித் தரையில் இருந்தான் ரகு!
சில காலத்துக்கு பிறகு சுகியை  ஒரு முறை வீதியில் கண்டான் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தால்.!தோழிகள் சூழ ரகுவை அவள் கண்டாள்!! ஆனால் சைக்கிளை நிறுத்தி அவள் கதைக்கவில்லை.பேசாமல் சென்றுவிட்டாள். பின்னால் இனவாத புலனாய்வு அவளையும் வேவு பார்க்கலாம் ,அப்பாவின் அதிகாரம் வலுவிழந்தாலும் இன்னும் என்ன ஆகும் எதிர்காலம் என்று எண்ணி இருப்பால் போலும்!

இந்த நிலையில் ரகுவையும் இன்னும் ஏன் காயப்படுத்துவான் என்று போனாலோ!

மேல் படிப்பு படிக்கவும் அல்லது அவள் தேகத்தையும் காமப்பேய்கள் மேய்ந்துவிடக்கூடும் என்ற பயத்தில் வேற ஊர் போனாலோ
புலம்பெய்ர்ந்து போனாலோ!
விடையே இல்லை!!!

விழியில் வலி தந்தவனே
விரும்பியபோது விலகினாய்
வழியில் வந்தாய் வன்னி வீதியில்
விடையில்லாத வேள்வித்தீ
வீழ்ந்த போது!

வருந்துகின்றேன்
விழியில் வலி தந்தவள்
விவசாயி மகன் விடுதலைகண்டு ஆனந்தம்.
விழிகள் பின்னே என்னையும் வேலி போடுகின்றது
வருந்திவிடாதே!
விரும்பும் உன் வருகை கண்டேன்
வாழ்வோம் இன்னொரு ஜென்மத்தில்!

அதுக்கு பிறகு ரகு சுகியை சந்திக்கவே இல்லை !

வழிமேல் விழிவைத்து விருப்புடன் காத்து இருக்கின்றான் ரகு விழியில் வலி தந்தவள்  வருவாள் என்ற எதிர்பார்ப்பில்! அவள் வருவாளா ??,அவன் சேர வேண்டி பிரார்த்திக்கும் கடல்கடந்தவன் நண்பன் இவன்!இந்தப்பாடலுடன் விடைபெறுகின்றான் வன்னிக்களத்தில் இருந்து!

                          (முற்றும்)

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book