இனவாத ஆட்சியில் இருப்பைத் தக்கவைக்க எல்லோரும் தற்காப்பு பயிற்ச்சி பெறுவது தவிர்க்க முடியாத நிலை என்பதை பள்ளிக்காலத்திலேயே புரிந்துகொண்டவர்களில் ரகுவும் ஒருவன் அதனால் தான் ஆவலுடன் கராத்தே பயின்றான் அன்றும் அப்படித்தான்!வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுவிளையாட்டு மைதானத்தில் நடக்கும் கராத்தே வகுப்பில் தவராமல் கலந்துகொள்வான்.!
தென் இலங்கை ஆட்சியாளர்கள் சீமெந்தைக்கூட தடை செய்த பொருட்கள் என்ற பட்டியலில் இட்டதால் பள்ளியில் உடுப்பு மாற்றுவதற்கு ஒரு அறையிருக்கு உள்ளே இரண்டாக பிரித்திருந்தாலும் வாசல் ஒன்றுதான்.
உள்ளே ரகு உடுப்பு மாற்றிக்கொண்டு வாசலுக்கு வரும் போது அடைப்புக்கு மற்ற பக்கத்தில் பெண்மையின் அழகினை தரிசிக்கும் சிற்பம் போல சுகி தனது சட்டையை கழற்றி  விட்டு டீ சேர்ட்டை போட்டுக்கொண்டு இருந்தாள். விழிக்கும் இமைப்பொழுதில் ரகு பார்த்துவிட்டான் அவன் பார்த்ததை அவளும் பார்த்துவிட்டாள். என்ன சுகி சொல்லிட்டு உள்ள வந்திருக்கலாம் இல்லை நான் உள்ளே நிற்கின்றேன்.என்று ஒரு வார்த்தை!சொல்லி இருக்கலாமே?
 சொரி ரகு நான்அக்கம்பக்கம்  கவனிக்கவில்லை என்ன காராத்தே எல்லாம் பழகுறீங்க போல ஆர்ஜின் மாதிரி என்று தனது டீசேர்ட்டை போட்டாள்.ரகு எதுவும் பேசாமல் வெளியே வந்துவிட்டான்
அவளும் அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. இங்கே அவளிடம் காமம் இல்லை தூய்மையான காதல் மட்டுமே இருந்தது.அவள் மனதில் காமம் இருந்திருந்தாள் இங்கே தவறு நடக்க சந்தர்ப்பம் இருந்தது.அவள் நினைத்திருந்தால்.  தான் உடுப்புமாற்றும் போது ரகு உள்ளே வந்தான் என்று சொல்லி அவனை அவமானப்படுத்தியிருக்க முடியும். இதுதான் சமயம் என்று பழிவாங்க முடியும்.அவள் அப்படி செய்யவில்லை.

சுகி நேராக நெட்போல் ப்ராக்டிஸ் நடக்கும் இடத்துக்கு சென்று நெட்போல் ப்ராக்டிஸில் ஈடுபட்டாள் விளையாட்டில் ஒன்ற முடியாத நிலையில் விழியினை காரத்தே வகுப்பை நோக்கினாள்  தோகை மயில் போல அது முடிய ரகு தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட தயார் ஆன போது ஒரு நிமிசம் ரகு என்று மறித்தாள்!

என்ன என்பது போல அவளை அளந்தது அளபெடை விழிகள்! அவன் பாவனை செய்ய
என்ன ரகு என்னை புரிந்துகொள்ள மாட்டிங்களா ?!சரியான கஸ்டமா இருக்கு ?படிக்கமுடியலை ஒரே உங்க ஞாபகமாகதான் இருக்கு !
சிந்தனையை சிறைப்படுத்த முடியவில்லை சில் என்று உங்க நினைவுகள் சீண்டுது உங்க மீது ஏன் என் விழிகள் மனது மஞ்சம் கொள்ளுகின்றது. என்று தவம் போல தணிமையில் இருந்து யோசித்தாலும்  விடையில்லை நான் என்ன செய்யுறது ரகு நீங்களே சொல்லுங்க?
உங்களுக்கு எப்படி சொல்லுறதுன்னு எனக்கு தெரியலை சுகி ?என் நிலமையை புரியாது உங்களுக்கு. சிட்டிசன் அஜித் போல என் பின்னாடி ஒரு கிராமம் இல்லை இருப்பது ஒரு கோவில் அதில் என் தந்தை தெய்வத்திருமகன் !
நானோ உத்தம புத்திரன் .உங்களை நான் லவ் பண்ணிணால் என்ன என்ன பிரச்சனை வரும் என்று ஒரு நிமிசம் யோசிச்சு பாருங்க?
 என்னைக்காதலிக்கும் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது .எனக்கு எவ்வளவு பிரச்சனை வரும் .
புரிந்துகொள்ளுங்க.!
உங்க அப்பா நினைச்சால் விவசாயி மகனை வீதியில் விட்டு நாடோடி போல என்னை என்னவேணும் என்றாலும் செய்யலாம் .
நிச்சயம் இந்தக்காதல் பூவே உனக்காகப் போல சரிவராது .ப்ளீஸ் இதுக்கு மேல என்னால் தெளிவாக புரியவைக்கமுடியாது.இத்தோட விட்டுவிடுங்கள் கவிதை பாடும் அலைகள் அல்ல இந்தக்காதல்!
ஏன் ரகு  நாங்கெல்லாம் விரும்ப கூடாதா ?என் அப்பா பெரிய ஆளா இருக்கலாம் அதுக்காக நான் என்ன பண்ணமுடியும்.!
இப்பவா நாம கலியாணம் கட்ட போறமா ?உங்கள் படிப்பு முடிய,என் படிப்பு முடிய அதுக்குள்ள எவ்வளவு மாற்றம் வருதோ?
இந்த மண்ணில் மரணங்கள் மலிந்த பூமியில் மனங்களின் ஆசைகளுக்கு இனவாதம் சங்காரம் செய்யுமோ யார் அறிவார்??
சிலவேளை எங்க வீட்டில் ஓக்கே சொல்லாம் இல்லையா ?
எனவே எங்க அப்பா நம் காதலை ஏற்றுக்கொள்ளவும் கூடும்!
நல்லாயோசிச்சு சொல்லுங்கண்ணா. என்று சொல்லிவிட்டு அவள் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றாள்!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book